மற்ற மதத்தவர்களை துன்புறுத்துவது தேசப் பற்றில்லை: சஜித் - sonakar.com

Post Top Ad

Saturday 14 September 2019

மற்ற மதத்தவர்களை துன்புறுத்துவது தேசப் பற்றில்லை: சஜித்


முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், இந்துக்களை துன்புறுத்துவது தேசப்பற்றில்லையென்பதை புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கிறார் சஜித் பிரேமதாச.தமது ஆட்சி மலர்ந்ததும் பௌத்த தர்மத்தைக் காப்பாற்றுவது போன்றே ஏனைய மதத்தவர்கள், மத வழிபாட்டுத்தளங்கள் மற்றும் இனங்களையும் பாதுகாப்பதும் ஒரு இனத்தின் பெயரால் இன்னொரு இனத்தை அழிக்க முனையும் செயல்களைத் தடுப்பதும் தமது கடமைகள் எனவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.

இனவாதம் மற்றும் பயங்கரவாதமற்ற நாட்டைக் கட்டியெழுப்புவதே தனது குறிக்கோள் எனவும் சஜித் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment