இனியும் நிகாப் தடை இல்லை: ஹலீம் தரப்பு தெரிவிப்பு! - sonakar.com

Post Top Ad

Friday 20 September 2019

இனியும் நிகாப் தடை இல்லை: ஹலீம் தரப்பு தெரிவிப்பு!அவசர கால சட்டத்தின் கீழேயே நிகாப் தடை செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது அது அமுலில் இல்லையென தமக்கு பொலிசாரினால் விளக்கமளிக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் விவகார அமைச்சர் ஹலீம் தரப்பு தெரிவிக்கிறது.இதற்கேற்ப பொலிஸ் தலைமையகத்திலிருந்து வெளியிடப்பட்ட கடிதம் ஒன்றும் அமைச்சரின் சகோதரரால் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, அவசர கால சட்டத்தோடு பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழும் நிகாப் தடை அமுல்படுத்தப்பட்டிருந்ததனால் இது குறித்து  மேலும் தெளிவு தேவைப்படுவதாகவும் அரசியல்வாதிகள் தெரிவிக்கின்றமையும் கருப்பு நிறத்தில் புர்கா அணிவதைத் தவிர்ப்பது நல்லதெனவும் அபிப்பிராயம் தெரிவிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:

Post a Comment