சிம்பாப்வே முன்னாள் ஜனாதிபதி காலமானார் - sonakar.com

Post Top Ad

Friday 6 September 2019

சிம்பாப்வே முன்னாள் ஜனாதிபதி காலமானார்சிம்பாப்வேயின் முன்னாள் ஜனாதிபதி ரொபர்ட் முகாபே தனது 95வது வயதில் இன்று காலமானார்.சுதந்திரப் போராட்ட நாயகனான ரொபர்ட் முகாபே பிற்காலத்தில் சர்வாதிகாரியாக மாறி விட்டதாக குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டு வந்த நிலையில் ஆட்சி மாற்றம் இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில், தமது நாட்டின் தந்தை உயிரிழந்துள்ளதாக தற்போதைய ஜனாதிபதி தனது இரங்கலில் தெரிவித்துள்ளமையும், முகாபேயின் ஆட்சியிலேயே அங்கு கருப்பின மக்களின் உரிமைகள் பெறப்பட்டதுடன் கல்வி, பொருளாதார, சுகாதார சேவைகளும் முன்னேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment