சாய்ந்தமருதில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் - sonakar.com

Post Top Ad

Friday 13 September 2019

சாய்ந்தமருதில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்


சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப் பட்டுக்கொண்டிருந்த 3 மாடி வகுப்பறைக் கட்டிடத்தினை திடீரென மாகாண மற்றும் வலயக் கல்வி உயர் அதிகாரிகளால் இடைநிறுத்தப் பட்டமைக்கு எதிராக எதிர்ப்பு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் சாய்ந்தமருதில் இன்று ஜூம்ஆத் தொழுகையின் பின்னர் இடம்பெற்றது.


சாய்ந்தமருது ஜூம்ஆப் பள்ளியிலிருந்து ஆரம்பமான இவ்வார்ப்பாட்ட பேரணி சாய்ந்தமருது பிரதேச செயலகம் வரை சென்று இடைநிறுத்தப்பட்ட கட்டடத்தினை மீண்டும் அல்-ஜலால் வித்தியாலயத்தில் நிர்மாணிக்குமாறு கோரி ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கான மகஜர் பிரதேச செயலக கணக்காளரிடம் கையளித்து வைக்கப்பட்டது.

இவ்வெதிர்ப்பு ஆர்ப்பாட்டம் பாடசாலையின் பழைய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் நலன் விரும்பிகளால் பல்வேறு வாசகங்கள் எழுதிய சுலோகங்களை ஏந்திய வண்ணம் முன்னெடுக்கப்பட்டது.

இதற்கு ஆதரவு தெரிவிக்கு முகமாக கடந்த ஒருவார காலமாக சாய்ந்தமருது கோட்டப் பாடசாலை அனைத்தும் கற்றல், கற்பித்தல் செயற்பாடின்றி முடப்பட்டிருந்துடன் அல்-ஜலால் பாடசாலை சமூகத்தினரால் தொடர்ச்சியான கண்ட ஆர்ப்பார்ட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

-றியாத் ஏ. மஜீத்

No comments:

Post a Comment