வெள்ளை வேனில் கடத்தப்பட்ட நபர் அத்துரிகிரியில் மீட்பு - sonakar.com

Post Top Ad

Friday 20 September 2019

வெள்ளை வேனில் கடத்தப்பட்ட நபர் அத்துரிகிரியில் மீட்பு


நேற்றைய தினம், மாத்தறை பெரலபனாதர பகுதியிலிருந்து வெள்ளை வேனில் கடத்தப்பட்ட 45 வயது நபர் அத்துருகிரியவில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.குறித்த பகுதியில் பல நோக்கு கூட்டுறவுச் சங்க அதிகாரியான இந்நபரைக் கடத்திய சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடத்தல் காரர்கள் இலக்கத்தகடுகள் அற்ற இரு வெள்ளை வேன்களில் வந்திருந்ததோடு பொலிசாரை குழப்பத்துக்குள்ளாக்கும் வகையில் இரு திசைகளில் பயணித்ததாகவும் எனினும் அதிகாலை வேளையில் நவீன தொழிநுட்ப உதவியுடன் அத்துருகிரியிலிருந்து கடத்தப்பட்ட நபர் மீட்கப்பட்டதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment