ரணில் - சஜித் சந்திப்பு: ஹரின் தரப்புக்கும் அழைப்பு - sonakar.com

Post Top Ad

Tuesday 10 September 2019

ரணில் - சஜித் சந்திப்பு: ஹரின் தரப்புக்கும் அழைப்பு


இன்று மாலை எதிர்பார்க்கப்படும் ரணில் - சஜித் சந்திப்பில் கலந்து கொள்ள சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வெளியிட்டு வரும் ஹரின் பெர்னான்டோ உட்பட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கட்சிக்குள் ஒற்றுமையே அவசியம் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ள நிலையில் இவ்வழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

2020ல் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் ஒருவர் நேரடியாகக் களமிறங்குவது வெற்றியைப் பெற்றுத் தரும் என சஜித் தரப்பு தெரிவிப்பதோடு சஜித் பிரேமதாசவை முன்நிறுத்தி பிரச்சார நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment