ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி - பொதுஜன பெரமுன இடையேயான கூட்டணிக்குத் தடையாக இருக்கும் சின்னப் பிரச்சினை தொடர்பில் ஆராய இன்று ஜனாதிபதி - மஹிந்த தரப்பிடையே விசேட சந்திப்பொன்று இடம்பெற்ற நிலையில் மஹிந்த தரப்பு மாற்று யோசனையொன்றை முன் வைத்துள்ளது.
இதனடிப்படையில் ஜனாதிபதி தேர்தலில் மொட்டுச் சின்னத்தை உபயோகிக்கும் அதேவேளை பொதுத் தேர்தலில் வேறு ஒரு பொதுச் சின்னத்துக்குள் இரு தரப்பும் இணையலாம் என ஆலோசனை முன் வைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவு படுத்தியே பெரமுன உருவாக்கப்பட்டுள்ள அதேவேளை, பெரமுனவின் முக்கிய நடவடிக்கைகள் அனைத்தும் ராஜபக்ச குடும்பத்தை அடிப்படையாக வைத்தே இயங்குகின்றமையும், விமல் வீரவன்ச - வாசுதேவ - கம்மன்பில போன்றோர் இதனூடாக பாரிய அளவில் பயனடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment