மஹிந்த இல்லாவிட்டால் கோட்டாவுக்கு அடையாளமே இல்லை: சுனில் - sonakar.com

Post Top Ad

Tuesday 24 September 2019

மஹிந்த இல்லாவிட்டால் கோட்டாவுக்கு அடையாளமே இல்லை: சுனில்


மஹிந்த ராஜபக்ச இல்லாவிட்டால் கோட்டாபேவுக்கு அடையாளமும் இல்லை அவருக்கு தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடாத்த ஆள் வரப் போவதுமில்லையென தெரிவிக்கிறார் ஜே.வி.பியின் சுனில் ஹந்துன்னெத்தி.மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திசாநாயக்கவுக்க மக்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருவதாகவும் வெற்றி வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கின்ற அவர், கோட்டாபேவின் பிரச்சாரங்கள் தொடர்பில் மக்கள் வெறுப்படைந்துள்ளதுடன் ஆர்வமும் குறைந்துள்ளதாக தெரிவிக்கிறார்.

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு பெரமுனவே முதலில் வேட்பாளர் ஒருவரை அறிவித்திருந்ததுடன் கோட்டாபே தொடர்ச்சியாக பல ஊர்களுக்கு சென்று சிறுபான்மை சமூகங்களின் மனதை வெல்ல முயன்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment