முல்லைத்தீவில் நிரந்தர முகாமிடத் தயாராகும் ஞானசார! - sonakar.com

Post Top Ad

Thursday 26 September 2019

முல்லைத்தீவில் நிரந்தர முகாமிடத் தயாராகும் ஞானசார!


வடபுலத்தில் புத்த தர்மத்தைக் காப்பாறும் தேவையிருப்பதனால் முல்லைத்தீவில் ஞானசார முகாமிட்டுத் தங்கியிருக்கத் தீர்மானித்துள்ளதாக பொது பல சேனா தகவல் வெளியிட்டுள்ளது.


இலங்கையின் அரசியல் சட்டம் வடக்குக்கு செல்லுபடியாகாது என அங்குள்ளவர்கள் தெரிவிப்பதாகவும் வட மாகாணமும் இலங்கையின் பகுதியே எனவும் அதை அங்குள்ளவர்களுக்கு உணர்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டிருப்பதாகவும் ஞானசார தரப்பு தெரிவிக்கிறது.

ஒரு பௌத்த துறவியின் உடலைத் தகனம் செய்வதற்கு எதிர்ப்பு வெளியிட்டவர்களை பொலிசாரும் அடக்கத் தவறி விட்டதாக ஞானசார தெரிவிக்கின்ற அதேவேளை குறித்த இடத்தில் அவ்வாறு தகனம் செய்யக் கூடாது என நீதிமன்றம் விடுத்த உத்தரவையும் மீறியே பிக்குகள் அங்க அடாவடித்தனம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment