முக்கிய தீர்மானங்கள்: 20ம் திகதி கூடும் தேர்தல் ஆணைக்குழு - sonakar.com

Post Top Ad

Monday 16 September 2019

முக்கிய தீர்மானங்கள்: 20ம் திகதி கூடும் தேர்தல் ஆணைக்குழு


தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு, எதிர்வரும் 20 ஆம் திகதி கூடவுள்ளது. தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மற்றும் ஆணைக்குழுவின் உறுப்பினர்களான பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல், ஜனாதிபதி சட்டத்தரணி நலின் அபேசேகர ஆகியோரின் தலைமையில் ஆணைக்குழு கூடவுள்ளது.



எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் முக்கிய பல  தீர்மானங்களை மேற்கொள்ளும் நோக்கில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு கூடவுள்ளதாக, ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அனைத்து மாவட்ட செயலாளர்கள், உதவித் தேர்தல்கள் ஆணையாளர்கள் மற்றும் பிரதித் தேர்தல்கள் ஆணையாளர்கள் ஆகிய  அனைவருக்கும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

எதிர்வரும் 20 ஆம் திகதி காலை 10.30 க்கும் ஆணைக்குழுவில் பிரசன்னமாகுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தௌிவூட்டுவதற்கே இவர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ள அனைத்துக் கட்சிகளினது செயலாளர்களையும், எதிர்வரும் 20 ஆம் திகதி தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வருகை தருமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

-ஐ. ஏ. காதிர் கான்

No comments:

Post a Comment