இம்முறை புதிதாக 2 லட்சம் பேருக்கு வாக்களிக்க வாய்ப்பு - sonakar.com

Post Top Ad

Monday 9 September 2019

இம்முறை புதிதாக 2 லட்சம் பேருக்கு வாக்களிக்க வாய்ப்பு


எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் புதிதாக 2 லட்சம் பேர் வாக்களிக்கவுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய.நவம்பர் 9 முதல் டிசம்பர் 9 வரையான காலப்பகுதிக்குள் ஜனாதிபதி தேர்தல் நடப்பதற்கான சாத்தியக்கூறு இருப்பதாகவும் மஹிந்த தேசப்பிரிய மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பெரமுன சார்பில் கோட்டாபேயும், ஜே.வி.பி சார்பில் அநுர குமாரவும் முன்னணி வேட்பாளராகக் களமிறங்கியுள்ளதுடன் சஜித் பிரேமதாச தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகாவிடினும் அவர் தொடர்ந்தும் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment