
நாட்டிலுள்ள எந்தவொரு வாக்காளருக்கும் 2019 ஆம் ஆண்டுக்கான புதிய வாக்காளர் இடாப்பில் தனது பெயர் பதியப்பட்டுள்ளதா என்பதைப் பரீட்சித்துப் பார்த்துக் கொள்ள முடியும் என்றும், இதற்காக எதிர்வரும் 19 ஆம் திகதி வரை சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும், தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க அறிவித்துள்ளார்.
கிராம சேவை உத்தியோகத்தர் அல்லது தேர்தல்கள் ஆணைக்குழுவின் slelections.gov.lk எனும் இணையத்தளம் என்பவற்றிலும் இவ்வாறு சரிபார்த்துக் கொள்ள முடியும்.
யாராவது ஒரு வாக்காளரின் பெயர் 2019 ஆம் ஆண்டின் வாக்காளர் பெயர்ப் பட்டியலில் காணப்படாது போனால், அவர் உடனடியாகவே தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்க முடியும்.
அத்துடன், 2019 ஆம் ஆண்டிற்கான வாக்காளர் இடாப்பில் பெயர்களை உள்ளடக்காதவர்கள், தமது பெயர்களை, எதிர்வரும் 19 ஆம் திகதிக்கு முன்பு பதிவு செய்துகொள்ள முடியும். இதற்கான சந்தர்ப்பம், ஆகஸ்ட் மாதம் 23 ஆம் திகதியிலிருந்து வழங்கப்பட்டுள்ளது.
2019 வாக்காளர் இடாப்பின் பிரதி இம்மாதம் 19 ஆம் திகதி வரை, நாட்டின் சகல கிராம சேவையாளர் காரியாலயம், மாவட்ட தேர்தல்கள் அலுவலகம் மற்றும் மாவட்ட செயலகம் ஆகியவற்றில் காட்சிப்படுத்தப்படும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
-ஐ. ஏ. காதிர் கான்
No comments:
Post a Comment