வேட்பாளர் அறிவிப்பு: UNPக்குள் தொடரும் முரண்பாடு! - sonakar.com

Post Top Ad

Friday 30 August 2019

வேட்பாளர் அறிவிப்பு: UNPக்குள் தொடரும் முரண்பாடு!


ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதில் ஐக்கிய தேசியக் கட்சி தாமதம் காட்டி வரும் நிலையில் அக்கட்சியின் சஜித் பிரேமதாச ஆதரவாளர்கள் பொறுமை இழந்து கருத்துக்கள் வெளியிட்டு வருகின்றனர்.இந்நிலையில், அக்கட்சியின் சட்ட விவகாரங்களுக்குப் பொறுப்பான செயலாளர் நானாயக்கார இது பற்றி விளக்கமளித்து, ஜனாதிபதி தேர்தல் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாமல் வேட்பாளரின் பெயரை வெளியிடுவதற்கு கட்சியின் யாப்பில் இடமில்லையென நேற்றைய தினம் தெரிவித்திருந்தார்.

எனினும், அவ்வாறு கட்சி யாப்பில் எவ்வித கட்டுப்பாடும் இல்லையெனவும் இருந்தால் நிரூபிக்கட்டும் எனவும் இன்று தீவிர சஜித் ஆதரவாளராக அஜித் பி. பெரேரா சவால் விடுத்துள்ள நிலையில் இரு தரப்பு முறுகல் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment