ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்ய கூட்டணிக்குள் 'பொறிமுறை': UNP - sonakar.com

Post Top Ad

Thursday 15 August 2019

ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்ய கூட்டணிக்குள் 'பொறிமுறை': UNPஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பும் ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய கூட்டணியான ஜனநாயக தேசிய முன்னணியின் உருவாக்கமும் தாமதமாகி வரும் நிலையில் தற்போது பெரும்பாலான முரண்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக கூட்டணிக் கட்சிகள் தெரிவிக்கின்றன.இப்பின்னணியில் அமைச்சர்கள் ஹக்கீம், மனோ கணேசன், சஜித், ரவி கருணாநாயக்க, அகில விராஜ் மற்றும் ரணில் விக்கிரமசிங்க இடையிலான விசேட சந்திப்பொன்றும் நிகழ்ந்துள்ளது.

வேட்பாளரை அறிவித்த பின்னரே கூட்டணி அமைக்கப்பட வேண்டும் எனும் சஜித் பிரேமதாசவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து கூட்டணி கட்சிகளின் ஒப்புதலுடனும் வேட்பாளரைத் தெரிவு செய்வதற்கான பொறிமுறையொன்று உருவாக்கப்படவுள்ளதாகவும் அதன் பின்னரே வேட்பாளர் தெரிவு இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment