சஜித்தை வேட்பாளராக்காவிட்டால் தனிக் கட்சி: UNPக்குள் பிரளயம் - sonakar.com

Post Top Ad

Tuesday 13 August 2019

சஜித்தை வேட்பாளராக்காவிட்டால் தனிக் கட்சி: UNPக்குள் பிரளயம்ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச அறிவிக்கப்படாவிட்டால் சஜித் பிரேமதாசவுடன் இணைந்து தனிக்கட்சியாக இயங்கவும் தயார் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் பகிரங்கமாக கருத்து வெளியிட ஆரம்பித்துள்ளனர்.இன்றைய தினம் ராஜாங்க அமைச்சர் திலீப் வெத ஆராச்சி இவ்வாறு தெரிவித்துள்ள அதேவேளை மங்கள, ஹரின், சுஜீவ உட்பட முக்கிய பிரமுகர்கள் சஜித் அணியைப் பலப்படுத்தி வருகின்றனர். இப்பட்டியலில் துமிந்த பண்டாரநாயக்க உட்பட ஐக்கிய தேசியக் கட்சியின் பின் வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இணைந்து வருகின்ற நிலையில் சஜித் தொடர்பில் சாதகமான முடிவொன்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், ஐக்கிய தேசியக் கட்சி தலைமை சரியான தீர்வொன்றை எடுக்காவிட்டால் தனிக் கட்சி ஊடாக போட்டியிடவும் தயார் என திலீப் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment