திவயினயின் ஷாபி எதிர்ப்பு பிரச்சாரமும் CID தகவலும் - sonakar.com

Post Top Ad

Saturday 3 August 2019

திவயினயின் ஷாபி எதிர்ப்பு பிரச்சாரமும் CID தகவலும்மருத்துவர் ஷாபி விவகாரத்தில் கடும் போக்காகவும் பக்கசார்பாகவும் நடந்து கொள்ளும் திவயின பத்திரிகை இன்றும் தமது ஷாபி எதிர்ப்பு பிரச்சாரத்திற்கமைவாக ஷாபி மீதான குற்றச்சாட்டிகளை மறைத்து பிரச்சாரங்களை முன்னெடுக்க தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு 60 கோடி ரூபா பணம் வழங்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.இதற்கிடையில், மருத்துவர் ஷாபிக்கு எதிராக முறையிட்டவர்களுள் இருவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது தாம் தற்போது கர்ப்பம் தரித்திருப்பதனால் விசாணைக்கு வர முடியாது என பதிலளித்ததாக சி.ஐ.டியினரை ஆதாரங்காட்டி தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ச்சியாக ஷாபி எதிர்ப்பு பிரச்சாரங்களை வெளியிட்டு வரும் திவயின மற்றும் ரதன தேரர் தலைமையிலான இனவாத குழுக்கள் தற்போது குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடமிருந்து ஷாபி மீதான விசாரணைகளை நீக்க வேண்டும் எனவும் கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment