முஸ்லிம்களிடமிருந்து பாதுகாப்பு தேடி தமிழர்கள் வாக்களிப்பார்கள்: வாசு - sonakar.com

Post Top Ad

Monday 12 August 2019

முஸ்லிம்களிடமிருந்து பாதுகாப்பு தேடி தமிழர்கள் வாக்களிப்பார்கள்: வாசு


ஈஸ்டர் தாக்குதலின் பின் ஏற்பட்டுள்ள நாட்டின் சூழ்நிலையில் தமிழ் மக்கள் வாக்கு வங்கியின் பெரும் பகுதி பெரமுனவுக்கே கிடைக்கும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார் வாசுதேவ நானாயக்கார.


முஸ்லிம் அடிப்படைவாதிகளிடமிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான இடமாக தமிழ் மக்களும் பெரமுனவைப் பார்ப்பதாகவும் தெரிவிக்கின்ற அவர், முஸ்லிம்களுள் ஒரு பகுதியினரும் தமது சமூகத்துக்குள் உள்ள அடிப்படைவாதிகளை இந்த அரசாங்கம் கட்டுப்படுத்தத் தவறுவதனால் பெரமுனவின் பக்கம் சாயவுள்ளதாகவும் தெரிவிக்கிறார்.

இதேவேளை, ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பது கோட்டாபேயின் தகுதியைக் குறைத்து மதிப்பிடுவதற்கான காரணியுமில்லையென வாசுதேவ தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment