அநுராதபுரம், கஹகடகஸ்திகிலிய எனும் முஸ்லிம் கிராமத்தில், வீட்டில் பிரசவம் பார்க்கப்பட்ட நிலையில் (28th July) இறந்து பிறந்த குழந்தையை இரகசியமாக அடக்கம் செய்த முஸ்லிம் பெற்றோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வைத்தியசாலைக்குச் செல்வதை தவிர்த்து வரும் பழக்கம் உள்ள குறித்த நபர்கள் வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளதாகவும் இதன் போதே குழந்தை இறந்து பிறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், விடயம் வெளியே தெரியாமலிருக்க இரகசியமாக குழந்தையின் ஜனாசா அடக்கப்பட்டுள்ளதாகவும் பின்னர் பிரதேசவாசிகள் இது குறித்து கண்டறிந்து பொலிசாருக்கு வழங்கிய தகவலையடுத்து குறித்த பெற்றோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் பத்திரிகை செய்தியொன்று வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment