உண்ணாவிரதம் புகழ் அத்துராலியே ரதன தேரர் அடுத்து மட்டக்களப்பு, கிரான் பகுதிக்குச் சென்று அங்கு முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லாஹ் நிர்மாணித்து வரும் மட்டக்களப்பு கம்பஸ் எனும் தனியார் கல்வி நிலையத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார்.
நாளைய தினம் அங்கு சென்று தனது 'இந்து' நண்பர்களுடன் இணைந்து புதிய சிங்கள - தமிழ் நட்புறவை உருவாக்கி அதனூடாக இப்போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவிக்கிறார்.
இதேவேளை, மட்டக்களப்பு கம்பஸ் உருவானால் அது ஆயிரக்கணக்கான சஹ்ரான்களை உருவாக்கும் எனவும் அதனை அரசாங்கம் கையகப்படுத்த வேண்டும் எனவும் ரதன தேரர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment