கல்முனை சாஹிறா புதிய அதிபராக எம்.ஐ. ஜாபீர் நியமனம் - sonakar.com

Post Top Ad

Friday 9 August 2019

கல்முனை சாஹிறா புதிய அதிபராக எம்.ஐ. ஜாபீர் நியமனம்நீண்ட காலமாக இழுபறியில் இருந்து வந்த கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை அதிபர் சர்ச்சைக்கு முடிவுகட்டுமுகமாக கல்வி நிர்வாக சேவை தரத்தை உடைய எம்.ஐ. ஜாபீர் (SLEAS) அவர்கள் புதிய அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். பாடசாலை மானவர்களினது நலனை கருத்தில் கொண்டு இந்த அதிபர் விடயத்தை உடனடியாக தீர்த்து வைக்க வேண்டும் எனும் கோரிக்கையை கல்முனை தொகுதி பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள் கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம்  அவர்களுக்கு விடுத்திருந்தார்.

அந்த வேண்டுகோளை ஏற்று நடவடிக்கை எடுத்த கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்கள் பொதுச்சேவை ஆணைக்குழுவின் ஆலோசனைகளையும் பெற்று அமைச்சின் செயலாளருக்கு வழங்கிய  சிபாரின் அடிப்படையில் கல்வி நிர்வாக தரத்தை உடைய எம்.ஐ. ஜாபீர் அவர்களை கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை அதிபராக அமைச்சின் மேலதிக செயலாளர் திரு. சலாஹுதின் அவர்கள் இன்று நியமித்தார். 

இந்நியமன கடிதத்தை வழங்கிய போது பாடசாலை பழைய மாணவர்களான பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ், ரிப்தி முஹம்மத் ஆகியோரும் உடனிருந்தனர். 

-நூருள் ஹுதா உமர்

No comments:

Post a Comment