நாளைய தினம் பெரமுனவின் மாநாட்டில் வைத்து எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளராக கோட்டாபே அறிவிக்கப்படுவார் என பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் தீவிர பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கோட்டாபே ஆதரவாளர்கள் புதிய ஆரம்பம் ஒன்றை எதிர்பார்த்திருப்பதாக உற்சாகத்தில் உள்ளனர்.
இதேவேளை, கோட்டாபேயின் பெயர் அறிவிக்கப்பட்டாலும் பின்னர் அவருக்கு வரக்கூடிய சட்டச் சிக்கல்களுளூடாக ஆள் மாற்றம் இடம்பெறும் என எதிர்க்கட்சியினர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment