கொழும்பு: 'பேர' வாவியில் இலவச பயணிகள் படகு சேவை - sonakar.com

Post Top Ad

Thursday 22 August 2019

கொழும்பு: 'பேர' வாவியில் இலவச பயணிகள் படகு சேவைகொழும்பு 'பேர' வாவியில் இன்று முதல் ஒரு மாத காலத்துக்கு இலவச பயணிகள் படகு சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


இலங்கை கடற்படை உதவியுடன் மேற்கொள்ளப்படும் குறித்த படகு சேவை பாதுகாப்பானது எனவும் கொம்பனித் தெரு முதல் கோட்டை வரையான தூரத்தை 10 நிமிடங்களில் நிறைவு செய்ய முடியும் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இதனூடாக போக்குவரத்து நெரிசலைக் குறைக்க முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment