சஜித் ஆதரவு சுஜீவ - அஜித் பெரேராவிடம் கட்சி மட்ட விசாரணை - sonakar.com

Post Top Ad

Tuesday 27 August 2019

சஜித் ஆதரவு சுஜீவ - அஜித் பெரேராவிடம் கட்சி மட்ட விசாரணை


சஜித் ஆதரவு சுஜீவ - அஜித் பெரேராவிடம் கட்சி மட்ட விசாரணை ஆரம்பமாகியுள்ளது.


இன்றைய தினம் தலைமையகத்துக்கு வரும்படி விடுக்கப்பட்டிருந்த அழைப்பை நிராகரித்து சமூகமளிக்காத நிலையில் கட்சியின் செயலாளர் அகில விராஜ் இதற்கான அறிவுறுத்தலை அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த இருவர் தொடர்பிலும் கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளை விசாரிப்பதற்கு ஏதுவாத எதிர்வரும் செப்டம்பர் 9ம் திகதிக்குள் பிரதிவாதிகளின் விளக்கத்தினை எழுத்து மூலம் கையளிக்கும்படி அகில விராஜ் கோரியுள்ளார்.

சஜித் பிரேமதாசவை கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக்க வேண்டும் என இவ்விருவரும் குரல் கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment