அகில இலங்கை மஸ்ஜித் சம்மேளனம் உதயம்! - sonakar.com

Post Top Ad

Sunday 4 August 2019

அகில இலங்கை மஸ்ஜித் சம்மேளனம் உதயம்!


கொழும்பு மற்றும் கண்டி மஸ்ஜித் சம்மேனளங்களின் ஏற்பாட்டில் தெஹிவளையில் தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் மாநாட்டில் வைத்து, அகில இலங்கை மஸ்ஜித் சம்மேளனம் என்ற எண்ணக் கரு உதயமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.நாடளாவிய ரீதியில் இயங்கும் பெரும்பாலான மஸ்ஜித்கள் இவ்வமைப்பில் இணைந்து உலமாக்களின் வழிகாட்டலில் இயங்கவுள்ளதாகவும் சமூக விவகாரங்களில் ஒன்றிணைந்து இயங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புர்கா தடை தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் முன் வைக்கப்பட்டுள்ளதையடுத்து இன்றைய தினம் களுபோவில பள்ளிவாசலில் முஸ்லிம் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டு இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment