நிகாப் தடை விவகாரம்: பாதுகாப்பு செயலாளரிடம் விளக்கம் கோரி ஹலீம் கடிதம் - sonakar.com

Post Top Ad

Tuesday, 27 August 2019

நிகாப் தடை விவகாரம்: பாதுகாப்பு செயலாளரிடம் விளக்கம் கோரி ஹலீம் கடிதம்


நாட்டின் அவசர காலச் சட்டம் நீக்கப்பட்டாலும் பாதுகாப்பு தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என்ற நிலையில்; அவசர காலச் சட்டம் நீக்கப்பட்டதுடன் அவசர கால சட்டத்தின் போது தடை செய்யப்பட்ட முஸ்லிம் பெண்கள் அணியும் முகத்திரைக்கான தடையும் நீங்கியுள்ளது என்ற வாதப் பிரதி வாதங்கள் முஸ்லிம்கள் மத்தியில் நிலவுகின்றது. இது தொடர்பான தெளிவை வழஙகுமாறு பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பொலிஸ் மாஅதிபருக்கு கடிதம் மூலம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதுடன் எனவும்  எனினும் சமகால சூழ்நிலையைக் கவனத்தில் கொண்டு இந்த விடயத்தில முஸ்லிம்கள் மிகவும் தூர நோக்குடனும் மிகவும் அவதானமாக நடந்து கொள்ள வேண்டும் எனவும் முஸ்லிம் சமய கலாசார மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் தெரிவித்தார்.



அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், நாட்டில் அவசர காலச் சட்டம் நீக்கப்பட்டாலும் பாதுகாப்புக்கான அனைத்து நடவடிக்கைகளையும் பாதுகாப்புத் தரப்பினர்களுக்கு வழங்கும் அதிகாரம் தொடர்பிலான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 

அதேவேளை அவசர கால சட்டத்தின் போது தடை செய்யப்பட்டிருந்த முகத்திரை நீங்கியுள்ளதாக பேச்சு நிலவுகிறது. எனினும் பெரும்பான்மை  சகோதரர்களின் மனோபவமும் அச்சமும் மாறியதாகத் தெரியவில்லை. இந்நிலையில் முஸ்லிம் சகோதரிகள் முகத்திரை அணிந்து வெளியேறும் போது பிற சமூகத்தினர்  அசௌகரியங்களுக்கு உள்ளாக நேரிடும் என்பதைக் கருத்திற் கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

- இக்பால் அலி

No comments:

Post a Comment