ரணிலிடமிருந்து தொலைபேசி அழைப்பு: அவசரமாக கிளம்பிச் சென்ற சஜித் - sonakar.com

Post Top Ad

Friday 30 August 2019

ரணிலிடமிருந்து தொலைபேசி அழைப்பு: அவசரமாக கிளம்பிச் சென்ற சஜித்


எம்பிலிபிட்டிய விகாரையொன்றின் நிகழ்வுக்குச் சென்றிருந்த சஜித் பிரேமதாச, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து அவரது அலுவலகத்துக்கு வருமாறு தொலைபேசி அழைப்பு வந்திருப்பதாகக் கூறி அவசரமாக கிளம்பிச் சென்ற சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. புனர் நிர்மாணம் செய்யபட்ட எம்பிலிபிட்டிய சங்கபால ரஜமகா விகாரையின் நிகழ்வில் கலந்து கொள்ளவே அங்கு சென்றிருந்த சஜித், குறித்த அழைப்பைக் காரணங் காட்டி, முன் கூட்டியே தனது உரையை சுருக்கமாக முடித்துக் கொண்டதுடன் அங்கிருந்து கிளம்பிச் சென்றுள்ளார். 

எனினும், இதுவரை இச்சந்திப்பு குறித்த விபரங்கள் வெளியிடப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment