கொல்லுப்பிட்டி பள்ளிவாசலில் விமானப் படையினரின் விசேட நிகழ்வு - sonakar.com

Post Top Ad

Wednesday 7 August 2019

கொல்லுப்பிட்டி பள்ளிவாசலில் விமானப் படையினரின் விசேட நிகழ்வு


விமானப் படையினரின் விசேட ரணவிரு உதவிய நிகழ்வு இன்று கொல்லுப்பிட்டி ஜும்மா பள்ளிவாசலில் தலைவர் கலீல் மொகமட் தலைமையில் இடம்பெற்றது.


இந்நிகழ்வின் பிரதம அதிதியாக விமானப்படைத் தளபதி எயாா் மாா்ஷல் டி.எல்.எஸ். டயஸ் கலந்து கொண்டிருந்ததுடன் யுத்த காலத்தில் விமானப்படையில் பணியாற்றி உயிர் நீத்த முஸ்லிம் அதிகாரிகளுக்கான விசேட துஆ பிரார்த்தனையும் இடம்பெற்றது.

நிகழ்வில் உயிரிழந்த அதிகாரிகளின் உறவினர்கள் மற்றும் பள்ளி நிர்வாகம், விமானப்படை அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

-அஸ்ரப் ஏ சமத்

No comments:

Post a Comment