சமய சுதந்திரத்துக்கான ஐ.நா விசேட அறிக்கையாளர் வருகை - sonakar.com

Post Top Ad

Wednesday 14 August 2019

சமய சுதந்திரத்துக்கான ஐ.நா விசேட அறிக்கையாளர் வருகை


ஐக்கிய நாடுகள் சபையின் சமய சுதந்திரத்துக்கான விசேட அறிக்கையாளர் அஹமட் சஹீத் நாளை இலங்கை வரவுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


2005ல் அப்போதைய அறிக்கையாளர் அஸ்மா ஜாங்கிரின் விஜயத்தின் பின் வழங்கப்பட்டிருந்த பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பது தொடர்பில் நேரில் கண்டறிவதோடு இலங்கையில் சமய நம்பிக்கைகளுக்கான சுதந்திரம் எவ்வாறு பேணப்படுகிறது என்பதை ஆராயவுள்ளதாக சஹீத் தெரிவித்துள்ளார்.

2010 முதல் கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் சமூகங்கள் ஒடுக்குமுறைக்குள்ளாக்கப்பட்டு வருவதன் தொடர்ச்சியில் இவ்விஜயம் அமைகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment