வெற்றி வேட்பாளரை நாங்களே கொண்டு வருவோம்: ராஜித! - sonakar.com

Post Top Ad

Sunday 11 August 2019

வெற்றி வேட்பாளரை நாங்களே கொண்டு வருவோம்: ராஜித!


மஹிந்த குடும்பத்தில் யார் போட்டியிட்டாலும், வெற்றி பெறப்போகும் வேட்பாளர் ஐக்கிய தேசியக் கட்சி கூட்டணியிலிருந்தே வரப் போகிறார் என அடித்துக் கூறுகிறார் ராஜித சேனாரத்ன.பெரமுன வேட்பாளராக கோட்டபாயவே நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது போன்று இன்றைய தினம் அக்கட்சியின் மாநாட்டில் வைத்து இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் முன் நிறுத்தப்படப் போகும் வேட்பாளர் தொடர்பில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதுடன் சஜித் பிரேமதாச தனது பிரச்சார நடவடிக்கைகளை ஏலவே ஆரம்பித்துள்ளார்.

ஆயினும், கட்சி மட்டத்தில் கருத்து வேறுபாடு நிலவுகின்ற நிலையில் கரு ஜயசூரிய முன் நிறுத்தப்படக்கூடும் எனும் சந்தேகமும் நிலவுகின்றமையும் ராஜித இவ்வாறு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment