கொழும்பிலிருந்து கழிவுகளை அருவக்காடு நோக்கி கொண்டு செல்லப்படுவது ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு இடையூறு விளைவிக்க முடியாது என உத்தரவிட்டுள்ளது மேன்முறையீட்டு நீதிமன்றம்.
கடந்த சில நாட்களாக கொழும்பு வீதிகளில் கழிவுகள் குவிந்து காணப்பட்டிருந்த நிலையில், மாநகர சபையினால் தற்போது துப்பரவுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கழிவுகள் அருவக்காடு நோக்கி அனுப்பப்பட்டு வருகின்றன.
எனினும், அதற்கு புத்தளம் பகுதியில் கடும் எதிர்ப்பும் தொடர் போராட்டங்களும் இடம்பெற்று வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment