ஹிஸ்புல்லாஹ்வின் கம்பஸ் வங்கிக்கணக்கில் ரூ. 36,000மே எஞ்சியுள்ளது: FCID - sonakar.com

Post Top Ad

Tuesday 27 August 2019

ஹிஸ்புல்லாஹ்வின் கம்பஸ் வங்கிக்கணக்கில் ரூ. 36,000மே எஞ்சியுள்ளது: FCID

Related image

2016ம் ஆண்டு ஜனவரி முதல் 2019 மே 31ம் திகதி வரையான காலப்பகுதியில் 4.4 பில்லியன் ரூபா வைப்பிலிடப்பட்டிருந்த ஹிஸ்புல்லாஹ்வின் மட்டக்களப்பு கம்பஸ் நிறுவன வங்கிக் கணக்கில் தற்போது 36,000 ரூபாவே எஞ்சியிருப்பதாக தெரிவிககிறது நிதி மோசடி விசாரணை பிரிவு.206 தடவைகளில் வங்கியில் குறித்த பணம் வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும் அது 825 தடவைகளில் மீளப்பெறப்பட்டிருப்பதாகவும் நீதிமன்றில் விபரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மேலும் 13 வங்கிக் கணக்குகளை ஆராய்வதற்கும் நீதிமன்றில் அனுமதி கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment