பூஜிதவுக்கு மேலும் சிக்கல்: பழைய விவகாரங்களைக் கிளறும் CID - sonakar.com

Post Top Ad

Saturday 6 July 2019

பூஜிதவுக்கு மேலும் சிக்கல்: பழைய விவகாரங்களைக் கிளறும் CIDகட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டு தற்போது விளக்கமறியலிலும் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை மேலும் நெருக்குதலுக்குள்ளாக்கும் வகையில் அவர் பற்றிய பழைய சர்ச்சைகளும் கிளறப்படுவதாக அறியமுடிகிறது.இப்பின்னணியில் இரு வருடங்களுக்கு முன்பாக (11 ஏப்ரல் 2017) பொலிஸ் தலைமையகத்தின் லிப்டில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பிலும் பூஜித் விசாரிக்கப்படவுள்ளார். இதற்கேற்ப கடந்த மாத இறுதியில் அன்றைய தினம் பூஜித்தினால் அச்சுறுத்தப்பட்டதாகக் கூறப்படும் பொலிஸ் ஊழியர் முறைப்பாடொன்றை செய்திருந்தார். தற்போது அதனை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

ஈஸ்டர் தாக்குதலைத் தவிர்க்கத் தவறியதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ளுமாறு தான் வலியுறுத்தப்பட்டதாக அண்மையில் பூஜித் ஜயசுந்தர தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment