ஹிஸ்புல்லாஹ்வுக்கு வந்த 'பணம்' : CIDக்கு சந்தேகம் - sonakar.com

Post Top Ad

Friday 19 July 2019

ஹிஸ்புல்லாஹ்வுக்கு வந்த 'பணம்' : CIDக்கு சந்தேகம்


மட்டக்களப்பு கம்பஸ் நிர்மாணத்துக்காக ஹிஸ்புல்லாஹ் பெற்றுக்கொண்ட 2 கோடி 70 லட்சம் அமெரிக்க டொலர் பணம் தொடர்பில் தொடர்ந்தும் சந்தேகம் நிலவுவதாக நீதிமன்றில் தெரிவித்துள்ளது குற்றப்புலனாய்வுப் பிரிவு.


இதில் சவுதி அரேபியாவில் தடை செய்யப்பட்ட அமைப்பொன்றின் 100 மில்லியன் டொலரும் உள்ளடங்குவதாகவும் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் ஈஸ்டர் தாக்குதலையடுத்து பாசிக்குடாவில் ஹிஸ்புல்லாஹ் - அரேபிய பிரஜைகளிடையே இடம்பெற்ற சந்திப்பு தொடர்பிலும் மேலதிக விசாரணைகள் தொடர்வதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்விவகாரத்தில் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லாஹ்விடம் நீண்ட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment