ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன எனும் புதிய பெயரிலான கூட்டணிக்கு மஹிந்த ராஜபக்சவின் பெரமுன தயாரில்லையெனில் தனித்துப் போட்டியிடுவதே சுதந்திரக் கட்சியின் தெரிவு என தெரிவிக்கிறார் மஹிந்த அமரவீர.
அவ்வாறு ஒரு கூட்டணிக்குத் தயாரில்லையெனில் இதற்கு மேலும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதில் பிரயோசனம் இல்லையென அவர் தெரிவிக்கிறார். இதேவேளை, பெரமுன தரப்பு தாம் தனித்துப் போட்டியிடத் தயாராக இருப்பதாக ஏலவே தெரிவித்து வருகிறது.
ஆறு கட்ட பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்துள்ள போதிலும் இரு தரப்பும் உடன்பாட்டைக் காண முடியாதுள்ள அதேவேளை ஜனாதிபதி தேர்தலில் சு.க தனித்தே போட்டியிடும் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment