ரதன - ஞானசாரவுக்கு 'ஆறு மாத' கால கொந்தராத்து: அசாத் சாலி - sonakar.com

Post Top Ad

Tuesday 2 July 2019

ரதன - ஞானசாரவுக்கு 'ஆறு மாத' கால கொந்தராத்து: அசாத் சாலி


ஆறு மாதங்களுக்குள் நாட்டை இனவாதத்துக்குள் தள்ளி நாசமாக்க வேண்டும் எனும் அடிப்படையில் ஜனாதிபதி, பிரதமர் போன்று செயற்படும் அதிகாரங்களுடன் ரதன தேரர் மற்றும் ஞானசாரவுக்கு அரசாங்கத்தினால் கொந்தராத்து வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் முன்னாள் மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி.நாடெங்கிலும் சென்று இனவாதத் தீயை பரப்பும் இவ்விருவர் தொடர்பிலும் அவசரகால சட்டம் இருந்தும் அரசாங்கம் நடவடிக்கையெடுக்காமல் இருப்பது கண்கூடு எனவும், நீதிமன்றில் வைத்தே சி.ஐ.டி அதிகாரியை மிரட்டும் அளவு ரதன தேரர் வளர்ந்திருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ள அவர், இந்த விஷக் கிருமிகள் நாட்டை அதாள பாதாளத்துக்குத் தள்ளுவதை அரசு பார்த்துக்கொண்டிருப்பதாக கவலை வெளியிட்டுள்ளார்.

முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக தொடர்ச்சியாக பல்வேறு முனையில் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு வருவதுடன் பிரத்யேகமான சலுகைகளை நீக்க வேண்டும் என ஞானசார தெரிவித்திருப்பது தொடர்பில் சோனகர்.கொம்முக்கு விளக்கமளிக்கையிலேயே அசாத் சாலி இவ்வாறு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment