யாரென்று நான் இன்னும் 'சொல்லவில்லை' : மஹிந்த - sonakar.com

Post Top Ad

Sunday, 21 July 2019

யாரென்று நான் இன்னும் 'சொல்லவில்லை' : மஹிந்தபெரமுன சார்பிலான ஜனாதிபதி வேட்பாளர் யார்? என்பதைத் தான் இன்னும் யாருக்குமே சொல்லவில்லை என்கிறார் மஹிந்த ராஜபக்ச.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பாக போட்டியிடப் போகும் தற்போதைய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன போட்டியாளராகவே கருதப்படாத நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் பெரமுன வேட்பாளர்கள் பற்றிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக கரு ஜயசூரிய - சஜித் பிரேமதாச ஆகியோரில் ஒருவர் எதிர்பார்க்கப்படுகின்ற அதேவேளை பெரமுன தரப்பில் கோட்டாபே எதிர்பார்க்கப்படுகிறார்.

எனினும், இரு கட்சிகளும் இதுவரை உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment