வசீம் தாஜுதீன்: அநுர சேனாநாயக்கவிடம் ஒக்டோபரில் விசாரணை - sonakar.com

Post Top Ad

Tuesday 30 July 2019

வசீம் தாஜுதீன்: அநுர சேனாநாயக்கவிடம் ஒக்டோபரில் விசாரணை


வசீம் தாஜுதீன் கொலை விவகாரம் தொடர்பில் சாட்சியங்களை மூடி மறைத்த குற்றச்சாட்டுக்குள்ளாகியிருக்கும் முன்னாள் டி.ஐ.ஜி அநுர சேனாநாயக்கவுக்கு எதிரான வழக்கு ஒக்டோபரில் விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இன்றைய தினம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள நிலையிலேயே ஒக்டோபர் 23ம் திகதி விசாரணையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹிந்த அரசில் விபத்தென மூடி மறைக்கப்பட்ட சம்பவம், கூட்டாட்சியினரால் கொலையென அறிவிக்கப்பட்டு உடனடியாக சட்ட நடவடிக்கையெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட போதிலும் நீண்டகாலமாக இவ்விடயம் இழுபறிக்குள்ளாகியுள்ளமையும் தற்போது தேர்தல் காலம் நெருங்குகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment