சஹ்ரானை விட மோசமானவர்களை தேடி மேர்வின் கெகிராவ விஜயம்! - sonakar.com

Post Top Ad

Sunday 28 July 2019

சஹ்ரானை விட மோசமானவர்களை தேடி மேர்வின் கெகிராவ விஜயம்!


சஹ்ரான் இந்த நாட்டுக்கு செய்த அக்கிரமத்தை விட மோசமான அக்கிரமக்காரர்கள் இருப்பதாகவும் அவர்கள் தேசத்தின் புராதன முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை அழித்து வருவதாகவும் தெரிவிக்கிறார் மேர்வின் சில்வா.


மீண்டும் அரசியலில் இடம் தேடிக் கொண்டிருக்கும் மேர்வின், அண்மைக்காலமாக புராதன தளங்களின் பாதுகாப்பு குறித்து பேசி வருகிறார். இப்பின்னணியில், கெகிராவ, கலாவெ வ , விஜிதபுர பகுதியில் புராதள தளங்கள் அழிக்கப்பட்டு அங்கு தென்னந்தோட்டம் உருவாக்கப்படுவதாக தகவல் கிடைத்ததையடுத்து அங்கு சென்ற மேர்வின் இவ்வாறு உணர்ச்சி வசப்பட்டு பேசியுள்ளதுடன் இந்த அக்கிரமக்காரன் இருந்தால் பிடித்து மரத்தில் கட்டியிருப்பேன் எனவும் தனது பாணியில் ஆவேசப்பட்டுள்ளார்.

இதேவேளை, அரசுக்கோ - எதிர்க்கட்சிக்கோ புராதன தளங்களை பாதுகாக்கும் அக்கறையோ அதற்கான வேலைத்திட்டமோ இல்லையெனவும் மேர்வின் குற்றஞ்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment