ஹபரனயில் ரயில் - ஜீப் மோதல் : மூவர் காயம் - sonakar.com

Post Top Ad

Wednesday, 24 July 2019

ஹபரனயில் ரயில் - ஜீப் மோதல் : மூவர் காயம்


ஹபரன, கல்கடவெல பகுதியில் பாதுகாப்பற்ற ரயில் கடவையொன்றைத் தாண்டிச் செல்ல முயன்ற ஜீப் ஒன்றுடன் ரயில் மோதியதில் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.ஹபரன பிரதேச சபை மருத்துவ அதிகாரி டொக்டர் அக்மீமன மற்றும் இரு சுகாதார அதிகாரிகளே இவ்வாறு காயமுற்றுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த ரயிலுடன் மோதியே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment