மட்டக்களப்பு கம்பஸ் 'அறிக்கை': மேலதிக அவகாசம் வழங்க எதிர்ப்பு - sonakar.com

Post Top Ad

Sunday 21 July 2019

மட்டக்களப்பு கம்பஸ் 'அறிக்கை': மேலதிக அவகாசம் வழங்க எதிர்ப்பு

Ar4iE6h

முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லாஹ்வினால் நிர்மாணிக்கப்பட்டு வரும் மட்டக்களப்பு கம்பஸ் என அறியப்படும் தனியார் கல்வி நிறுவனம் தொடர்பிலான அறிக்கையை சமர்ப்பிக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு மேலதிக கால அவகாசம் வழங்க அமைச்சரவையில் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.


பதில் உயர் கல்வியமைச்சரினால் முன் வைக்கப்பட்ட கோரிக்கையே இவ்வாறு எதிர்ப்புக்குள்ளாகியுள்ளது. ஆரம்பத்தில் வழங்கப்பட்ட இரு வார அவகாசம் போதாது எனவும் இரு மாதங்கள் தேவைப்படுவதாகவும் விளக்கப்படுத்தப்பட்ட நிலையில் ஈற்றில் ஒரு மாத காலம் வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

குறித்த விவகாரத்தை ஆராய்ந்து நாடாளுமன்ற தெரிவுக்குழு வழங்கியுள்ள அறிக்கையை ஆராய்ந்து அது தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்கவே இவ்வாறு மேலதிக கால அவகாசம் கோரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment