ஹொ'பொத்தான: பதியுத்தீன் மஹ்மூத் மாணவர்கள் ஐவர் பல்கலை தெரிவு - sonakar.com

Post Top Ad

Friday 26 July 2019

ஹொ'பொத்தான: பதியுத்தீன் மஹ்மூத் மாணவர்கள் ஐவர் பல்கலை தெரிவு


2018-2019 ஆண்டு பல்கலைக்கழக கல்விக்காக மாணவர்களை உள்வாங்குவதற்கான வெட்டுப்புள்ளிகள் நேற்று நள்ளிரவு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்டுள்ள நிலையில் ஹொரவ்பொத்தான பதியுத்தீன் மஹ்மூத் மஹா வித்தியாத்தின் 5 பேர் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளதாக பாடசாலையில் அதிபர் ஜனாப் அப்துல் சத்தார் தெரிவித்துள்ளார்.


கடந்த 2018 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற உயர்தர பரீட்சையில் 25 மாணவர்கள் கலைப் பிரிவில் பரீட்சைக்கு தோற்றினர்.

இவர்களில் A.M சப்ருன் நிஸா, S முஸ்பிகா, M.F சஸ்னா, R.M ரிஸ்வான் ஆகியோர் தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கும் B.றிஸ்னா   
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கும் தெரிவாகியுள்ளதாக பாடசாலையில் அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

-முஹம்மட் ஹாசில்

No comments:

Post a Comment