எங்கள் மீதான நம்பிக்கை மீளுறுதி செய்யப்பட்டுள்ளது: ரணில் - sonakar.com

Post Top Ad

Saturday, 13 July 2019

எங்கள் மீதான நம்பிக்கை மீளுறுதி செய்யப்பட்டுள்ளது: ரணில்


ஈஸ்டர் தாக்குதலைப் பொறுத்தவரை அரசாங்கம் தகுந்த நடவடிக்கையெடுத்திருப்பதனை நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளதுடன் அரசின் மீதான நம்பிக்கை மீளுறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.புலனாய்வுப் பிரிவுகளுக்கிடையிலான தொடர்பாடல் எங்கு பிழைத்துள்ளது என்பதையே தற்போது கண்டறிய வேண்டும் எனவும் இதனை முழுமையாகக் கண்டறியவே நாடாளுமன்ற தெரிவுக்குழு விசாரணை இடம்பெறுவதாகவும் ரணில் மேலும் தெரிவித்துள்ளார்.

தற்போது அரசு புத்துணர்வுடன் இயங்கி வருவதாகவும் ரணில் தெரிவிக்கின்ற அதேவேளை,  தமிழ் தேசியக் கூட்டமைப்பு பேரம் பேசியே பிரேரணைக்கு எதிராக வாக்களித்துள்ளதாக தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment