மருதமுனையில் பிரதேச செயலகம் கோரி கையெழுத்து வேட்டை - sonakar.com

Post Top Ad

Friday 26 July 2019

மருதமுனையில் பிரதேச செயலகம் கோரி கையெழுத்து வேட்டை


கல்முனை மாநகர பகுதியில் அமைந்துள்ள  மருதமுனைக்கு நிர்வாக ரீதியான பிரதேச செயலகம் அமைக்கப்பட வேண்டும் என்ற   கோரிக்கை  ஒன்றை வலியுறுத்தி  பள்ளிவாசல்கள் மற்றும் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் வெள்ளிக்கிழமை (26) ஜும்மா  தொழுகையை தொடர்ந்து மருதமுனை மக்களினால் கையெழுத்து வேட்டை ஆரம்பித்து வைக்கப்பட்டது.


இதன் போது  மருதமுனை பகுதியில் உள்ள சகல    ஜும்மா பள்ளிவாசல் முன்றலிலும்     இந்த கையெழுத்து வேட்டை ஆரம்பமானதுடன்   பிரதேச மக்கள்  சமூக ஆர்வலர்கள்  என பலரும்  பங்குபற்றினர்.

சில தினங்களுக்கு முன்னர் உள்நாட்டலுவல்கள்இ மாகாண சபைகள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன அவர்களை சந்தித்து முஸ்லிங்களின் பிரச்சினைகள் குறித்து பேசிய முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் குழுவினரிடம் மருதமுனை- நற்பட்டிமுனை மக்களின் தேவையாக இருக்கும் இந்த செயலகத்தை உருவாக்க அமைச்சர் வஜிர அபேவர்த்தன உடன்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனஇ பிரதமர் ரணில் விக்ரமசிங்கஇ உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிரஇமற்றும் முஸ்லிம் அமைச்சர்கள்இ பாராளுமன்ற உறுப்பினர்களிடம் குறித்த மகஜர் கையளிக்கப்பட உள்ளது.

மேலும் கல்முனை   மாநகரில் அண்மைக்காலமாக சூடுபிடித்திருக்கும் சாய்ந்தமருது நகர சபை போராட்டம்இ கல்முனை வடக்கு உப  பிரதேச செயலக தரமுயர்வு போராட்ட வரிசையில் இன்று மருதமுனையிலும்  கையெழுத்து  போராட்டம் ஆரம்பமானமை குறிப்பிடத்தக்கது.

-பாறுக் ஷிஹான்

No comments:

Post a Comment