நவம்பரில் ஜனாதிபதி தேர்தல்: தேதி குறிக்கும் டலஸ்! - sonakar.com

Post Top Ad

Monday, 8 July 2019

நவம்பரில் ஜனாதிபதி தேர்தல்: தேதி குறிக்கும் டலஸ்!நவம்பர் 23ம் திகதியளவில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என தெரிவிக்கிறார் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முக்கியஸ்தர் டலஸ் அழகப்பெரும.டிசம்பர் 9ம் திகதிக்கு முன் எப்படியாயினும் தேர்தல் நடாத்தப்பட வேண்டும் என்பதாலும் க.பொ.த சாதாரண தர பரீட்சையைக் கருத்திற்கொண்டும் பார்க்கையில், நவம்பர் 23ம் திகதியே தேர்தலை நடாத்துவதற்கான சாத்தியமிருப்பதாக அவர் தெரிவிக்கின்றார்.

பெரமுன தரப்பிலிருந்து கோட்டாபே களமிறக்கப்படும் அதேவேளை, சு.க தரப்பில் மைத்ரியே போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐ.தே.க தமது வேட்பாளர் தொடர்பில் இறுதியறிவிப்பை விரைவில் வெளியிடப் போவதாக தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment