தோப்பூருக்கான தனி பிரதேச செயலகம் உருவாக்கம் தொடர்பில் கலந்துரையாடல் - sonakar.com

Post Top Ad

Friday, 12 July 2019

தோப்பூருக்கான தனி பிரதேச செயலகம் உருவாக்கம் தொடர்பில் கலந்துரையாடல்திருகோணமலை மாவட்டம் தோப்பூருக்கான தனியான பிரதேச செயலகம் கோரி பல்வேறு கவனயீர்ப்பு போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. இது விடயம் தொடர்பில் அமைச்சரவையிலும் பேசப்பட்டிருந்த நிலையில் இன்று (12) உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தனவுடனான சந்திப்பொன்று  கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் இன்று இடம் பெற்றது.திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் அவர்கள் தோப்பூர் பிரதேச செயலக தனி உருவாக்கம் பற்றிய ஆவணங்கள் அடங்கிய கோவைகளை அமைச்சரிடத்தில் கையளித்து தனிப் பிரதேச செயலக உருவாக்கம் தொடர்பில் தெளிவுபடுத்தியிருந்தார்.

இக் கலந்துரையாடலில் முன்னால் இராஜாங்க அமைச்சர்களான எம்.எஸ்.எம்.அமீர் அலிஇ ஹரீஸ்இ திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் உட்பட அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரும்  கலந்து கொண்டிருந்ததுடன் அங்கு கல்முனைஇ கோரளைப் பற்று பிரதேச செயலகம் உருவாக்கம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

-ஹஸ்பர் ஏ ஹலீம்

No comments:

Post a Comment