அடிப்படைவாதிகள் வளர்வதற்கு 'பொலிசாரே' காரணம்: ஞானசார - sonakar.com

Post Top Ad

Wednesday, 17 July 2019

அடிப்படைவாதிகள் வளர்வதற்கு 'பொலிசாரே' காரணம்: ஞானசார


முஸ்லிம் சமூகத்துக்குள் அடிப்படைவாதிகள் வளர்வதற்கும் அவர்களுக்குத் தேவையான வகையில் இயங்குவதற்கும் ஸ்ரீலங்கா பொலிசாரின் ஒத்துழைப்பே காரணம் என தெரிவிக்கிறார் ஞானசார.குறிப்பாக கிழக்கு மாகாணத்தில், அடிப்படைவாதிகளுக்கு எதிராகப் பேசியோரே பாதிக்கப்பட்டிருப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் முறையிடச் சென்றால், முறையிடச் சென்றவர்களுக்கே அச்சுறுத்தல் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், பொலிசாரின் பக்க சார்புக்கு உதாரணமாக, திகன வன்முறையில் கைதானவர்களுக்கு மாதக்கணக்கில் பிணை வழங்கப்படவில்லையாயினும் ஈஸ்டர் தாக்குதலின் பின் கைதான தேசிய தௌஹீத் ஜமாத்தின் கொழும்பு அமைப்பாளர்களுக்கு சில வாரங்களிலேயே பிணை வழங்கப்பட்டுள்ளதாகவும்  ஞானசார தெரிவிக்கிறார். 

இதேவேளை, காத்தான்குடி பகுதியிலிருந்து பல குழுக்கள் தற்போது தம்மிடம் அடைக்கலம் தேடியிருப்பதாகவும் ஞானசார தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment