
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவே சட்ட-ஒழுங்கு அமைச்சர் என்கின்ற போதிலும் ஐக்கிய தேசியக் கட்சி அவரை பொம்மையாக்கி விட்டு முழுக் கட்டுப்பாட்டையும் கையகப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கிறார் உண்ணாவிரதம் புகழ் அத்துராலியே ரதன தேரர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினரான குறித்த தேரர் அண்மைக்காலமாக எதிரணி அரசியலில் ஈடுபட்டு வரும் நிலையில் இவ்வாறு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். ஸ்ரீலங்கா பொலிஸ் ஐக்கிய தேசியக் கட்சியின் தேவைப்பேற்காகவே இயங்கி வருவதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
இன்று அவர் நடாத்தியிருந்த செய்தியாளர் சந்திப்பில் வைத்தே இவ்வாறு அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment