இரண்டு தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடாத்தலாம்: தேர்தல் ஆ.குழு - sonakar.com

Post Top Ad

Monday 29 July 2019

இரண்டு தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடாத்தலாம்: தேர்தல் ஆ.குழுமுதலில் ஜனாதிபதி தேர்தலை நடாத்துவதா அல்லது மாகாண சபை தேர்தலை நடாத்துவதா என்ற வாதம் மெதுவாக சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. இதன் பின்னணியில் நீதிமன்றம் சென்று தேர்தல்களை பின் போட முனைவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் இது குறித்த மாற்று யோசனை ஒன்றை முன் வைத்துள்ளது தேர்தல் ஆணைக்குழு.இதனடிப்படையில் உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கினால் ஜனாதிபதி தேர்தல் மற்றும் மாகாண சபை தேர்தல்களை ஒரே நேரத்தில் நடாத்தவும் முடியும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவிக்கிறது.

எனினும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மாகாண சபைத் தேர்தலையும் ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதி தேர்தலையும் முதலில் வேண்டி நிற்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment