பறித்துச் செல்லப்பட்ட பொலிஸ் துப்பாக்கி மீட்பு! - sonakar.com

Post Top Ad

Saturday 6 July 2019

பறித்துச் செல்லப்பட்ட பொலிஸ் துப்பாக்கி மீட்பு!


மட்டக்களப்பு புதூர் பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரிடமிருந்து பறித்துச் செல்லப்பட்ட ரிவோல்வர் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.வீதியோரத்தில் வீசப்பட்ட நிலையில் குறித்த கைத்துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

வியாழனன்று, புதூர் திமில தீவுப்பகுதியில் பொலிசாருடன் ஏற்பட்ட முறுகலின் போது இவ்வாறு துப்பாக்கி பறித்துச் செல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment