முடிந்தால் ரதன தேரர் அரசைக் கவிழ்க்கட்டும்: அசாத் சவால்! - sonakar.com

Post Top Ad

Tuesday 30 July 2019

முடிந்தால் ரதன தேரர் அரசைக் கவிழ்க்கட்டும்: அசாத் சவால்!நேற்றைய தினம் சவால் விடுத்தபடி ஏழு நாட்களுக்குள் அத்துராலியே ரதன தேரர் அரசை கவிழ்க்க முடியுமாக இருந்தால் தான் அரசியலை விட்டும் ஒதுங்கி விடப் போவதாக தெரிவிக்கிறார் தேசிய ஐக்கிய முன்னணி தலைவரும் முன்னாள் மேல் மாகாண ஆளுனருமான அசாத் சாலி.ஏழு தினங்களுக்குள் கோடிக்கணக்கான மக்களைக் கூட்டி ஜனாதிபதியையும் - பிரதமரையும் வீட்டுக்கு அனுப்பப் போவதாக தெரிவிக்கும் ரதன தேரர், பெரமுன தரப்பின் அரசியலுக்காகவே ஓலமிடுவதாகவும் தெரிவிக்கும் அவர், 95 வீத சிங்கள மக்கள் நல்லவர்களாக இருக்க, ரதன தேரர் - கம்மன்பில - விமல் வீரவன்ச போன்றவர்களே சாபமாகக் காட்சியளிப்பதாக தெரிவிக்கிறார்.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியலில் இருக்கும் ரதன தேரர் தமக்கு வெட்கம் - மானம் இருந்தால் முதலில் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டு விலக வேண்டும் எனவும் இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment